பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களின் போது, தனது மையவாத கூட்டணியை தீவிர வலதுசாரிகள் முறியடித்ததை அடுத்து அவர் உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், அவர் சட்டமன்றத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய சட்டமன்றத்திற்கான முதல் சுற்றுத் தேர்தல் ஜூன் 30ஆம் தேதியும், இரண்டாவது சுற்று ஜூலை 7ஆம் தேதியும் நடைபெறும் என்று மக்ரோன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களின் முடிவு, “ஐரோப்பாவைப் பாதுகாக்கும் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல முடிவு அல்ல” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல்
