உலக வளர்ச்சி முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 5வது ஆண்டு நிறைவின் உயர்நிலை பேச்சுவார்த்தை 25ம் நாள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதற்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். அவர் குறிப்பிடுகையில், வளர்ச்சியானது, மனித குலச் சமூகத்தின் நிலையான தலைப்பாகும். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தரப்புகளின் முயற்சியுடன், உலக வளர்ச்சி முன்மொழிவு பரவலாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, 120க்கும் மேலான நாடுகளில் தொடர்புடைய திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு, சாதனைகளைப் பெற்றுள்ளன என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மாறி வரும் உலகளவில் வளர்ச்சியை நனவாக்குவதில் மக்களின் விருப்பம் மேலும் வலுவானது என்றும், மிக பெரிய வளரும் நாடான சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனையுடன், உலக வளர்ச்சி முன்மொழிவின் செயலாக்கத்தை முன்னெடுத்து, தொடர வல்ல வளர்ச்சிக்கான நம்பிக்கையை, தொடரக் கூடிய நடைமுறையாக மாற்றி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்திற்குப் புதிய பங்கு ஆற்ற விரும்புகிறது என்றும் வலியுறுத்தினார்.
உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான 5வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
You May Also Like
பண்பாடு தொடர்பான ஷி ச்சின்பிங்கின் புதிய படைப்புகளின் வெளியீடு
August 27, 2026
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூப்பர் சீனாவில் பயணம்
May 31, 2026
More From Author
சீனக் குதிரை ஆண்டிற்குப் பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து
February 21, 2026
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
March 29, 2024
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
September 25, 2026
