செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: சரக்குக் கப்பலில் 6 பேர் பலி, 10 பேர் காயம்  

Estimated read time 1 min read

செங்கடலில் மோச்சா துறைமுகத்திற்குத் தெற்கே பயணித்துக் கொண்டிருந்த வணிக சரக்குக் கப்பல் மீது ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
தான்சானியா கொடியுடன் பயணித்த ‘திஹாமா’ என்ற சரக்குக் கப்பலை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
முதல் தாக்குதலில் கப்பலில் தீப்பற்றி பாகிஸ்தானை சேர்ந்த மூவர் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர் என நான்கு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

You May Also Like

More From Author