2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
அதன்பின்னர், 28-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்திற்கு செல்கிறார்.
அங்கே, புதிதாக அமைக்கப்படவுள்ள இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
அதன் பின்னர் கேரளாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார் பிரதமர்.
இதனிடையே, 27-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர், திருப்பூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்படுகிறது.
அதன் பின்னர் தூத்துக்குடி செல்லும் மோடி, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கிறார்.
அங்கே ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில்வே தூக்கு மேம்பாலத்தையும் திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.