பேரழிவு சமாளிப்பு திறனை உயர்த்துவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய, பேரழிவு தடுப்பு, பேரழிவு அபாயக் குறைப்பு, பேரழிவு நிவாரணம் ஆகியவற்றின் திறன் உயர்த்துவது என்ற தலைப்பிலான முக்கிய கட்டுரை, ஆகஸ்டு 16ஆம் நாள் ஜியூஷி இதழில் வெளியாக உள்ளது.

இக்கட்டுரையில், பரந்த நிலம், சிக்கலான நிலவியல், பல்வகை காலநிலை, அடிக்கடி ஏற்படக்கூடிய இயற்கைப் பேரழிவு ஆகியவற்றை சீனா கொண்டுள்ளது. பல்வேறு இயற்கைப் பேரழிவுகளைச் சமாளிப்பதற்கான திறன் மற்றும் தரத்தை உயர்த்துவது, மக்களின் உயிர் மற்றும் உடைமையின் பாதுகாப்பையும், சமூக நிலைத்தன்மையையும் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரழிவு மேலாண்மையை, முன்னேச்சரிக்கையாக மாற்ற வேண்டும் என்றும், பெருமளவிலான பேரழிவு சமாளிப்பதற்கான திறனை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் ஆதரவை வலுப்படுத்தி, இயற்கைப் பேரழிவு பற்றிய அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டு, முக்கியத்துவமான தொழில் நுட்ப சவால்களுக்கான தீர்வை முன்னேற்ற வேண்டும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author