வாரணாசியில் இருந்து மும்பை நோக்கி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணியின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பரிசோதித்தபோது எதிர்பாராதவிதமாகத் தோட்டா பாய்ந்து இரு பாதுகாப்பு ஊழியர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்ல அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் உரிய உரிமம் மற்றும் ஆவணங்களுடன் துப்பாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி உண்டு.
ஆனால் அதற்கு சில கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பயணிகள் பின்பற்ற வேண்டும்.
விமானத்தில் துப்பாக்கி எடுத்துச் செல்லலாமா? வாரணாசி விமான நிலைய துப்பாக்கிச்சூடு சம்பவமும் மத்திய அரசின் கடும் விதிகளும்
