2026ஆம் ஆண்டு சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாடு நடைபெற்றது வருகிறது. இதை முன்னிட்டு, ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்ற மார்ட்டின் ஹேரர் என்பவர், சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
சீனக் கல்வி துறையினர்களுடன் நீண்டகாலமாக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வரும் அவர், சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மூத்த அறிஞராவார்.
அவர் கூறுகையில், கடந்த 5-10 ஆண்டுகளாக, சீனாவின் கணிதவியல் ஆய்வு உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், வெளிநாட்டு அறிஞர்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவதை ஈர்க்கும் விதம், சீன அரசு பல கொள்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது, சீனாவில் புதிய தலைமுறை இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் காணப்படுகின்றனர் என்றார்.
2035ஆம் ஆண்டுக்குள் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லரசை கட்டியமைப்பது என்ற இலக்கை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், சீன அரசு மேற்கொண்ட தொலைநோக்கு தன்மை வாய்ந்த கொள்கைகள், சீனாவுக்குத் திரும்பிய அறிவியல் ஆராய்ச்சிப் பணியாளர்களுக்கு நிதானமான வளர்ச்சி அடிப்படையை வழங்கின. கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசு, கணிதவியல் துறை மற்றும் முழு அடிப்படை அறிவியல் துறைகளுக்கும் தொடர்ச்சியாகவும் பெருமளவிலும் வள முதலீட்டை வழங்குவது, என் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
