இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத், நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியைப் பெற்றுள்ளார்.
இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் நேபாளத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா- நேபாளம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ராணுவ ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவ தலைமைத் தளபதி தீரஜ் சேத்துக்கு, நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை நேபாள அதிபர் ராமச்சந்திர பௌடேல் வழங்கினார்.
