டிஜிட்டல் ரென்மின்பி தொடர்பான எல்லை தாண்டிய ஒத்துழைப்பு விரிவாக்கம்

சி.பி.யீ.டி.எஸ் என அழைக்கப்படும் எல்லை தாண்டிய மின்னணு-ரென்மின்பியின்(e-CNY)பரிமாற்றச் சேவைகளில் (CBETS) சேர்வது பற்றிய ஒப்பந்தத்தில் 26 நிதி நிறுவனங்கள் முதல் தொகுதியாக கையொப்பமிட்ட பிறகு, கடந்த செப்டம்பர் திங்களின் இறுதி வரை, வெளிநாட்டில் உள்ள மேலும் 39 நிதி நிறுவனங்கள், நேரடி பங்கெடுப்பாளராக இச்சேவையில் சேர்வதற்கான விண்ணப்பத்தை  அளித்துள்ளன என்று மின்னணு ரென்மின்பி சர்வதேச செயல்பாட்டு மையம் அண்மையில் தெரிவித்தது.

இவ்வாண்டிலிருந்து மின்னணு ரென்மின்பி சர்வதேச செயல்பாட்டு மையம் தொடர்ந்து சி.பி.யீ.டி.எஸ் சேவைகளை மேம்படுத்தி, சீராக ஒத்துழைப்பு அளவை விரிவாக்கி வருகின்றது. வெளிநாட்டு பணவியல் அதிகார அமைப்புகளின் பணப் பரிமாற்ற முறைமைகள் மற்றும் சட்டப்பூர்வ டிஜிட்டல் நாணய முறைமைகளுடனான இருதரப்பு இணைப்புகளையும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நேரடி அணுகலையும் இந்தச் சேவைகள் ஆதரிக்கிறன. இந்த மேடையின் மூலம், மின்னணு ரென்மின்பியின் எல்லை தாண்டிய சேவைகள் என்பது, வர்த்தகத்துக்கு மட்டுமின்றி, எல்லை தாண்டிய மக்கள் பரிமாற்றங்களுக்கும் ஆதரவளிக்கிறது.

You May Also Like

More From Author