அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிஎன்என் செய்தியாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய 16 வயது சிறுவனுக்கு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, ஜார்ஜியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டரான ஜான் ஓசாஃப் கூறிய கருத்துகள் குறித்து சிஎன்என் மூத்த செய்தியாளர் கிரிஸ்டன் ஹோம்ஸ் கேள்வி எழுப்பினார்.
அப்போது, அவரை பலமுறை இடைமறித்த ட்ரம்ப், “அமைதியாக இருங்கள்” என கூறினார். சிறுவன் முன்னிலையில் மிகவும் மரியாதை குறைவாக நடத்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், கிரிஸ்டன் ஹோம்ஸை ஒரு போலியான செய்தியாளர் என்றும், போலி செய்திகளை பரப்புபவர் எனவும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். ட்ரம்பின் அணுகுமுறை செய்தியாளர்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
