சீனத் தேசிய தின விடுமுறை நாட்களில் மின்சார வாகனங்கள் மூலமான பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தேசிய அதிவேக மின்னேற்ற வசதிகளுக்கான கண்காணிப்பு சேவை தளம் வெளியிட்ட தரவுகளின்படி, தேசிய தின விடுமுறையின் முதல் நாளில், நாடளவில் அதிவேக நெடுஞ்சாலைகளில் மொத்த மின்னேற்ற அளவு 2கோடியே 80இலட்சத்து 4690 கிலோவாட்டை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே நாளுடன் ஒப்பிடும்போது 60.4விழுக்காடு அதிகமாகும். மேலும், விடுமுறை நாட்களில் ஒரே நாள் மின்னேற்ற அளவில் இது புதிய சாதனையைப் படைத்துள்ளது.
விடுமுறை நாட்களில் மின்னேற்றத்திற்கான தேவை மேலும் அதிகரித்ததையும், மேலும் அதிவேக நெடுஞ்சாலை சேவைப் பகுதிகளில் உள்ள மின்னேற்ற வசதிகள் சீராக இயங்கி, புதிய எரியாற்றல் வாகனங்களின் நீண்ட தூரப் பயணத்திற்கு பயனுள்ள ஆதரவை வழங்கியதை இது வெளிக்காட்டியுள்ளது.
