மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

Estimated read time 0 min read

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள காதி பவனில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தியின் சுதேசி மற்றும் கிராமப்புறத் தொழில்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, காதி கிராமோத்யோக் பவனில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுகளை வழங்கினார். பின்னர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் மற்றும் கொலு கண்காட்சியை பார்வையிட்டார்.

காதி கிராமோத்யோக் பவனில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான காதி ஆடைகளை பார்வையிட்ட ஆளுநர் அர்லேகர், சில காதி ஆடைகளையும் வாங்கினார்.

You May Also Like

More From Author