அமைதி நிறைந்த உலகை உருவாக்க இந்தியாவால் மட்டுமே வழிகாட்ட முடியும் என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தீவிரவாதம், சமநிலை மற்றும் நடுநிலைப் பாதை இல்லாததால் உலகம் அமைதியின்றி தவிப்பதாக குறிப்பிட்டார். இதனால்தான், இனி முன்னேறிச் செல்ல வேண்டிய பாதை இந்தியாவிலிருந்தே உருவாகும் என்பதை உலகம் உணர்ந்துள்ளதாக மோகன் பாகவத் தெரிவித்தார்.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக எந்த நாட்டையும் வெற்றிகொள்ளாமல், யாரையும் மதமாற்றம் செய்யாமல், யார் மீதும் தாக்குதல் நடத்தாமல் மகிழ்ச்சி, அமைதியை நோக்கிய ஒரு பாதையை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார். அதனால்தான், உலகம் நம்மிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
