ஐ.நா பொது பேரவையின் மூன்றாவது குழுவின் பொது விவாதக் கூட்டத்தில், ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சோங் அக்டோபர் முதல் நாள் உரைநிகழ்த்தியபோது, மனித உரிமைகளை அரசியல்மயமாக்குவதையும், கருவியாகப் பயன்படுத்துவதையும், அதனை ஆயுதமாக்குவதையும் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
தற்போதைய சர்வதேச நிலைமை, 2ஆவது உலகப் போருக்குப் பிறகு மிகவும் சிக்கலான மற்றும் ஆழமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச மனித உரிமை இலட்சியமானது முன் எப்போதும் காணாத அபாயங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், பல்வேறு நாடுகளுக்கும் தத்தமது மனித உரிமைகள் வளர்ச்சிக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கவும், சர்வதேச மனித உரிமைகள் விவகாரங்களில் சமமாக பங்கேற்று முடிவெடுத்து பயனடையவும் உரிமைகள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் இன்பமான வாழ்வானது, மிக முக்கிய மனித உரிமை என்ற கொள்கையை சீனா கடைப்பிடிப்பதாகவும், சீனாவின் நவீனமயமாக்கலின் பலன்கள் அனைத்து மக்களுக்கும் மேலும் சமத்துவமாகப் பயனளிக்கும் வகையில், முழுச் செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தை தொடர்ந்து வளர்த்து மேம்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
