சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், தமிழகத்தில் MLFF எனப்படும் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அமலுக்கு வந்துள்ளது.
Multi Lane Free Flow தொழில்நுட்பத்தால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமலேயே தொடர்ந்து பயணிக்கும் நிலையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதற்காக, சாலையின் குறுக்கே அமைக்கப்படும் கேன்ட்ரி கட்டமைப்பில் ANPR கேமரா, RFID ரீடர் மற்றும் LiDAR தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வாகனத்தின் பதிவு எண் மற்றும் FASTag தானாக அடையாளம் காணப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். முதற்கட்டமாக நெமிலி, சென்னசமுத்திரம், பரனூர் ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் காத்திருப்பு நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், எரிபொருள் பயன்பாடும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
