17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செப். 6 முதல் பூஜைகள் தொடக்கம்  

Estimated read time 1 min read

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இதனையொட்டி கும்பாபிஷேகம் தொடர்பான ஆரம்பக்கட்டப் பூஜைகள் செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
கடைசியாக 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஐதீகம் உள்ள நிலையில், 2018 பிப்ரவரி 2 அன்று கோவிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகப் பணிகள் தாமதமாகின.
கோவில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
திருப்பணி மற்றும் யாகசாலை பூஜைகளுக்காக உபயதாரர்களிடமிருந்து மொத்தம் ரூ.21 கோடி பெறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author