ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றதும், அதன்பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவின் வருகையும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா அதிரடியாக 61 ரன்களும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் தரப்பில் அர்பாத் மின்ஹாஸ் மற்றும் அப்ரார் தானியல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஹசன் நவாஸ் 50 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்து கடும் போராட்டம் அளித்தார். இருப்பினும், இந்தியப் பந்துவீச்சாளர் அக்சர் படேல் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முட்டுக்கட்டை போட்டார்.
இறுதியில் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 192/6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஏற்கனவே இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்றிருந்த நிலையில், ஆடவர் அணியும் தங்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Pakistan’s Silver medal ceremony After loosing to India by 19 runs
Indian team standing at top center Gold medal position.
Jay Shah was present but didn’t do the medal ceremony.
Asian Games 2026 https://t.co/C0Nz2eF1Oj
— XUnfiltered (@XUnfiltere69061) October 3, 2026
போட்டி முடிந்து நடைபெற்ற பதக்க விநியோக விழாவில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா பங்கேற்றார். அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தங்கப் பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதேவேளையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஜெய் ஷா வெள்ளிப் பதக்கங்களை அணிவிக்கவில்லை.
நிஷின் நகர மேயர் ஹிரோக்கி கொண்டோ பாகிஸ்தான் வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களை வழங்கினார். மேலும், சல்மான் நசீர் வீரர்களுக்குப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ நினைவுப் பரிசுகளை வழங்கினார். இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்த விழாவில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் செயற்குழு உறுப்பினரும் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவருமான நிலோ ஜெயதொலகேவும் கலந்து கொண்டார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. முன்னரே திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக அவரால் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என ஏ.சி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
