நிர்மல்குமார் மீது அதிருப்தியில் தவெகவினர்

Estimated read time 0 min read

உள்ளாட்சித் தேர்தலில் தமது ஆதரவாளரை மேயராக கொண்டு வந்துவிட வேண்டும் என்று கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி தரப்பு முயன்று வருகிறது.

மதுரையில் தவெக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், பொறுப்பு அமைச்சராக சிடிஆர் நிர்மல்குமார் இருந்து வருகிறார். இன்னொரு அமைச்சராக காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் இருக்கிறார். கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகியோருக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இரு தரப்புமே அதிருப்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தமது ஆதரவாளரை மேயராக கொண்டு வந்துவிட வேண்டும் என்று கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி தரப்பு முயன்று வருகிறது. ஆனால் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரோ, தனது தீவிர ஆதரவாளரை தான் முதல் நிலை பட்டியலில் வைத்திருக்கிறார்.. இதனால் கவுன்சிலர் சீட் கேட்டு காய் நகர்த்தும் பல்வேறு தரப்பினரும் அவரது ஆதரவாளரை அணுகி வருகின்றனர். ஏற்கனவே மதுரையில் தவெக தரப்பில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம் பெறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி இருவருமே புஸ்ஸி ஆனந்திடம் இதுதொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது மதுரை தவெகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் என்று தவெகவினர் மத்தியில் முனும்னுக்கப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author