ஆசிய விளையாட்டுப் போட்டியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும், தலா 11 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவை 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.
இதனைப் பாராட்டி ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, வீராங்கனைகளுக்கு தலா 11 லட்சம் ரூபாயும், அணியின் உதவிப் பணியாளர்களுக்கு தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக அறிவித்துள்ளார்.
