பாபநாசம் தாமிரபரணி ஆற்றை மாசுபடுத்தும் வகையில் ஆடைகள் உள்ளிட்டவற்றை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை கொட்டி ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ராஜேஸ்வரி மண்டபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா, கழிவறை கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தார்.
மேலும், ஆற்றங்கரை பகுதிகளிலும் நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார்.
