“த.வெ.க அரசை பாராட்டலாம்… இப்போ 8 பெண் அமைச்சர்கள் இருக்குறாங்க”- அண்ணாமலை

Estimated read time 1 min read

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பேசிய ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, மாற்றத்தை நோக்கி அரசியல் பயணிப்பதாகவும், அந்த மாற்றத்திற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “கடந்த ஒரு மாதத்தில் We the leaders சார்பாக 12 லட்சம் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு குளங்கள் மற்றும் நதிகளை சுத்தம் செய்துள்ளோம். இன்று மண்ணும் குப்பையும் மட்டுமே உங்கள் கையில் ஒட்டும். ஆனால் ஒரு நாள் அதிகாரமும் உங்கள் கையில் ஒட்டும், அது வரை நமது அனைத்து வேலையையும் சிறப்பாக செய்யுங்கள். ஒரே இரவில் எதுவும் மாறாது, அர்பணிப்புடன் வேலை செய்வோம்.

இந்த மாதம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்க உள்ளோம். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?- கடந்த 2020-ஆம் ஆண்டில் 2,821 ஆக இருந்த போக்ஸோ வழக்குகள், 2024 -இல் 21,639 ஆகப் பன் மடங்கு உயர்ந்துள்ளது. தவெக ஆட்சியில் 8 பெண்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியுள்ளது. எங்கள் ஆட்சியில் ஆண்களுக்கு நிகராக சரி பாதி 17 பெண் அமைச்சர்கள் அமைச்சரவையில் மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நம் ஆட்சிக்கு வரக்கூடிய பட்சத்தில் பெண்களுக்கு சரிசமமாக முழுவதும் கொடுக்க வேண்டும். அரசியலை கொஞ்சம் தள்ளிவைத்து சமுதாயப் பணி எடுத்துள்ளோம். அரசியல் பேசுவதற்கு காலம் உள்ளது. கிடைப்பது ஒரு வாழ்க்கை, சமுதாயப் பணிகளை முதலில் எடுத்தது அதனால்தான் வீ த லீடர்ஸ் அரசியல் அமைப்பாக மாறும்போது பரப்புரை இன்றி தேர்தலில் நிற்கும் சூழல் இருக்க வேண்டும்” என்றார்.

You May Also Like

More From Author