கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வசூலிப்பது நிறுத்தப்படும்

Estimated read time 0 min read

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் சிஎம் விஜய் பயிர் கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் சில வங்கிகளில் வசூலிக்கப்படுவதாக செய்திகள் பரவிய நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்பட,

நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை வசூலிக்கும் பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் யாராவது பயிர்க்கடனை வசூலிப்பதற்காகத் தொடர்பு கொண்டால், விவசாயிகள் உடனடியாக 9884000845 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாகச் சில விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு கடன்களை வசூலிக்க முயற்சி செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதன் பின்னணியிலேயே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த முக்கிய எச்சரிக்கையையும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author