தங்கம் சவரனுக்கு ₹800 சரிவு!

Estimated read time 1 min read

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரு நாள் ஏறுவதும் மறு நாள் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதற்கு உலகளாவிய போர் பதற்றம், பொருளாதார நிலையற்ற தன்மை, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அமெரிக்க டாலர் வலுவிழப்பு போன்ற பல காரணிகள் சொல்லப்படுகின்றன.

எனினும், இந்தியாவை பொருத்தவரை அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலையற்று காணப்படுகிறது.

நேற்று (அக்டோபர் 2) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.95 உயர்ந்து ரூ.13,775-க்கும், ஒரு சவரன் ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனை

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 3) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,675-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,09,400-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

You May Also Like

More From Author