இன்று அபுதாபியில் நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச ஊதியத்தை BCCI ரூ. 18 கோடியாக நிர்ணயித்துள்ளது.
“அதிகபட்ச கட்டண விதி” என்ற பிசிசிஐயின் புதிய விதி காரணமாகவே வெளிநாட்டு வீரர்களின் சம்பளம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி, ஒரு வெளிநாட்டு வீரர் ஏலத்தில் அதிகபட்சமாகப் பெறக்கூடிய தொகை என்பது, அதிகபட்ச தக்கவைப்பு ஸ்லாப் தொகையில் எது குறைவாக உள்ளதோ அதுவாக இருக்கும்.
முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச விலைக்குப் போன வீரரின் (ரிஷப் பந்த் – ரூ. 27 கோடி) தொகையையும், அதிகபட்ச தக்கவைப்பு தொகையையும் (ரூ. 18 கோடி) ஒப்பிடுகையில், ரூ. 18 கோடி குறைவாக உள்ளதால், வெளிநாட்டு வீரர்களுக்கு இதுவே அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலம் 2026: வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.18 கோடியாக நிர்ணயம்
