சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!!

Estimated read time 0 min read

சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் ஏப்.,24 கொடைக்கானலுக்கு வந்தார். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் சகஜமாக உரையாடினார்.

அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.இன்று(ஏப்., 29) கொடைக்கானல் தனியார் விடுதியில் இருந்து சென்னைக்கு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். அவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

மதியம் 12:00 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு திரும்புகிறார்.

You May Also Like

More From Author