சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் சுன் வெய்தோங் 13ஆம் நாள், சீனாவுக்கான ஜப்பானியத் தூதர் கனசூகி கெஞ்சியை வரவழைத்து, ஜப்பான் தலைமையமைச்சரின் தவறான கூற்றுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜப்பானிய தலைமை அமைச்சர் கடந்த வாரம் தைவான் பற்றி கூறிய போது ஆத்திரமூட்டல் கூற்றை வெளிப்படுத்தி, தைவான் நீரிணையில் இராணுவம் மூலம் தலையீட்டை நடத்தும் சாத்தியம் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்தார். இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிட்ட சுன் வெய்தொங், இது தொடர்பாக சீனா ஜப்பானுக்குப் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் ஜப்பான் தன் தவற்றைத் திருத்திக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். இதனால், கடும் மனநிறைவின்மை அடைந்துள்ள சீனா ஜப்பானின் கருத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
