இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இதுவரை, 2026ஆம் ஆண்டு கோடைக்கால விடுமுறையில் சீனத் திரைப்படங்களின் வசூல் 1100 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. தினசரி வசூல் கடந்த 42 நாட்களில் தொடர்ச்சியாக 10 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
மேலும், 120க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. திரைப்படச் சந்தை வர்த்தகம் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.
இவ்வண்டு கோடைக்கால விடுமுறையில், சமூக நிகழ்வு, பொழுதுப்போக்கு, நுகர்வு ஆகியவற்றைக் கொண்ட பண்பாட்டு இடங்களாக திரையரங்குகள் மாறியுள்ளன. இதன் மூலம், திரைப்பட நுகர்வு தொழில் சங்கிலி தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது.
