சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் சார்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி குழு அண்மையில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பணி பயணம் மேற்கொண்டு, உள்ளூர் பிரதேசத்தில் பல்வேறு தேசிய இனத்தவர்களுடன் பரிமாறிமாற்றம் செய்து வருகிறது. சின்ஜியாங்கில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கியுள்ள உரையின் எழுச்சியை ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் படித்து, சின்ஜியாங் சமூகத்தின் நிதானம் மற்றும் நீண்டகால அமைதி எனும் இலக்குகளை நனவாக்கி, சின்ஜியாங்கில் சட்ட அடிப்படையிலான ஆட்சிமுறை மேற்கொண்டு, ஒற்றுமை, பண்பாடு ஆகியவை தொடர்பான பணிகளை
மேம்படுத்தி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம் எனும் முன்னேற்றப் போக்கில், அழகான சின்ஜியாங்கை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவரும், மத்திய கமிட்டி பிரதிநிதி குழுவின் தலைவருமான வாங் ஹூநீங், அலேடைய் பகுதியை பார்வையிட்டார். எல்லை பிரதேசத்தின் கட்டுமானம், கிராமப்புற சுற்றுலா, உயிரினச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முதலியவை குறித்து அவர் அறிந்துகொண்டார். அங்கு பணி செய்கின்ற காவற்துறையினர், கிராமவாசிகள் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசினார். எல்லை பகுதி கட்டுமானம் எனும் முக்கிய கடமையை
நிறைவேற்றி, சமூகத்தின் ஆட்சி முறையை வலுப்படுத்தி புத்தாக்கம் செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.