ஜனவரி 23ஆம் நாள் பிற்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், வட கிழக்குச் சீனாவில் அமைந்துள்ள லியௌநிங் மாநிலத்தின் பென்சி நகரில் ஆய்வுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நகரில் உருக்குச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் அவர் பார்வையிட்டார். இத்தொழிற்சாலையின் மத்திய கட்டுப்பாட்டு மையம் மற்றும் வேலை தொடர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஷிச்சின்பிங், இத்தொழிற்சாலையில் உற்பத்தி திறன் மேம்பாடு மற்றும் உயர் தரமுள்ள வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்தும் அறிந்துகொண்டார்.