நவம்பர் மாதத்தில் சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு 2023ஆம் ஆண்டின் நவம்பரை விட, 0.2விழுக்காடு அதிகரித்தது. அவற்றில், நகரப்புறங்களின் நுகர்வு விலைக் குறியீடு 0.1விழுக்காடும், கிராமப்புறங்களின் நுகர்வு விலைக் குறியீடு 0.2விழுக்காடும் உயர்ந்தன.
உணவுப் பொருட்களின் விலை 1.0விழுக்காடு அதிகரித்தது. உணவு அல்லாத பொருட்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் சமமாக உள்ளது. நுகர்வுப் பொருட்களின் விலையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் சமமாக இருக்கும்.
சேவை விலை 0.4விழுக்காடு அதிகரித்தது. பொதுவாகக் கூறினால், ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.3விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நவம்பரில் சீன நுகர்வு விலைக் குறியீடு அக்டோபரில் இருந்ததை விட, 0.6விழுக்காடு குறைவாகும். அவற்றில் உணவு விலை 2.7விழுக்காடும் உணவு அல்லாத பொருட்களின் விலை 0.1விழுக்காடும் சரிவடைந்தது.