செங்கடலில் உள்ள பல கடலுக்கடியில் செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்துள்ளன.
இதனால், உலகளாவிய இன்டர்நெட் டிராஃபிக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மைக்ரோசாஃப்ட் அஸூர் போன்ற கிளவுட் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம், ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே தரவுப் பரிமாற்றத்திற்கான வேகத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
இந்த சேவைத் தடை குறித்து மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், “கடலுக்கடியில் உள்ள கேபிள்களைச் சரிசெய்ய நீண்ட காலம் ஆகலாம்.
இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மேலும், இணையப் போக்குவரத்தை மாற்று வழிகளில் திருப்பிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் கேபிள்கள் சேதம்: உலகளாவிய இன்டர்நெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் சேவை பாதிப்பு
