வங்கதேச நாட்டின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள ஆலம்கீர்வுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
இதில் சீனாவும் வங்கதேசமும் பாரம்பரிய நட்பு அண்டை நாடுகளாகும் என்று குறிப்பிட்ட ஷி, ஆலம்கீர்வுடன் சேர்ந்து இரு நாட்டு நட்புறவை தொடச்சியாக வளர்த்து, உயர் தரமான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக கட்டியமைத்து, இரு நாட்டு மக்களுக்கு மேலும் சிறப்பாக நன்மை பயக்கப் பாடுபட விரும்புவதாகத் தெரிவித்தார்.
