சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 24ஆம் நாள் கூறுகையில், இரு தரப்பின் கலந்தாலோசனையின்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், மத்திய கமிட்டியின் வெளியுறவு விவகார ஆணையப் பணியகத்தின் இயக்குநரும், சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான சீனாவினஅ சிறப்புப் பிரதிநிதியுமான வாங்யி 25ஆம் நாள் பெய்ஜிங்கில், இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவலுடன் சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 25ஆவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியாங் 24ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி, சீன-இந்திய எல்லைப் பிரச்சினை பற்றி செய்தியாளருக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், எல்லைப் பிரதேசத்தின் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காக்கும் வகையில், எல்லைப் பிரச்சினைகள் பற்றிய 25ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில், இரு நாட்டுத் தலைவர்களும் எட்டியுள்ள பொது கருத்துக்களின்படி, இருதரப்பினரும் எல்லைப் பிரச்சினைகள் பற்றி தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் பரிமாற்றம் மேற்கொள்ளவுள்ளனர். இரு தரப்புறவு மற்றும் சர்வதேச பிரதேச பிரச்சினைகள் பற்றியும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர் என்று தெரிவித்தார்.
