சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை, 3 லட்சத்து 31 ஆயிரத்து 640 கோடி அமெரிக்க டாலராகும்.
ஆகஸ்டு இறுதி வரை இருந்ததை விட இது 2 ஆயிரத்து 820 கோடி அமெரிக்க டாலரை அதாவது 0.86 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் செப்டம்பரில், அமெரிக்க டாலர் குறியீட்டு எண் குறைந்தது. உலக நாணய சொத்துகளின் விலை அதிகரித்தது.
இம்மாதத்தின் அன்னிய செலாவணி கையிருப்பு அளவு அதிகரித்தது என்றார்.