ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து வருகை தந்த புனிதப் பயணியர் குழு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள காங் ரன்போச்சே மலை மற்றும் மபாம் யுன் ட்சொ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் புனிதப் பயணம் மேற்கொள்ளத் துவங்கியது.
இவ்வாண்டு முதன்முதலாக புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள அக்குழுவில் மொத்தம் 39 பயணியர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களுள் 68 வயதான தமினா பென்டியா புனித மலையான காங் ரன்போச்சே மலையில் பயணம் மேற்கொண்ட போது குறிப்பிடுகையில், சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகள் என்பதோடு சீனா மிகவும் அற்புதமான நாடு என்றார். மேலும், இங்குள்ள பணியாளர்கள் அனைவரும் அன்போடு உதவி செய்வதாகவும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
இதனிடையில் அப்பகுதி வெளியுறவுத் துறை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இரண்டாம் சுற்று புனிதப் பயணியர்க் குழு ஜூன் 25 ஆம் நாளன்று நாதுலா கணவாய் வழியாக சீனாவுக்குள் நுழையும் எனத் தெரியவந்துள்ளது.