சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமதுடன் ஏப்ரல் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாங்யீ கூறுகையில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட கடந்த 50 ஆண்டுகளாக, சீனாவும் மலேசியாவும் உண்மையான நண்பர்களாக திகழ்கின்றன. சீனா, மலேசியாவுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, இரு தரப்புறவின் மேலும் பிரகாசமான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும், மலேசியாவுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உலகின் தென் பகுதியின் பொது நலன்களைப் பேணிக்காக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
முகமது கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை மலேசியா உறுதியாகப் பின்பற்றி வருகிறது. மலேசியா, சீனாவுடன் பல்வேறு நிலைகளிலான தொடர்புகளை வலுப்படுத்த விரும்புகிறது என்றார்.