இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ, வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.
இந்தாண்டு மார்ச்சில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, நம் நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால், வீடுகளுக்கு தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்ய, ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு, வணிக காஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் குறைந்தது.சமீபத்தில் வணிக சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் மீதான கட்டுப்பாடுகளை, பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியது.
இந்நிலையில் இன்று (ஜூலை 1) சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3,106க்கு விற்கப்படுகிறது.
மேற்காசியாவில் போர் துவங்கியது முதல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று விலை குறைந்து உள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ரூ.928.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
