அமெரிக்காவில் புதிய H-1B விசா பெறுவதற்கான கட்டணத்தை $100,000-க்கும் அதிகமாக (சுமார் $103,265) நிரந்தரமாக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டம் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமெரிக்க நிறுவனங்களின் வேலைவாய்ப்பு செலவை கணிசமாக உயர்த்தும் என்பதோடு, H-1B விசாவை பெருமளவில் நம்பியிருக்கும் இந்திய பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) புதிய H-1B விசாக்களுக்கான இந்தக் கட்டண முன்மொழிவை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ட்ரம்ப் அறிவித்த $100,000 கட்டண உத்தரவை ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்த புதிய விதிமுறை 30 நாட்கள் பொதுக் கருத்து கேட்பு காலத்திற்கு விடப்பட்டு, ஆண்டின் இறுதிக்குள் இறுதி செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
H-1B விசா கட்டணம் $100,000 ஆக உயர்வு: ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால் இந்தியர்களுக்கு விழுந்த பேரிடி
