அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ படைகளின் பங்களிப்பு குறித்து வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் போது பேசிய டிரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க வீரர்களைத் தவிர மற்ற நேட்டோ நாட்டு வீரர்கள் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிடவில்லை என்றும், அவர்கள் சற்று பின்வாங்கியே இருந்தனர் என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்கா ஒருபோதும் நேட்டோவைச் சார்ந்திருந்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் பேச்சுக்கு கண்டனம்: மன்னிப்பு கேட்க கோரும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர்
