சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில், தங்கத்தைச் “செப்பு” எனப் பதிவிட்ட முன்னாள் நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர்கள் சிலையில் தங்க கவசம் செப்பனிட்ட பின், 42 புள்ளி 8 கிலோவில் இருந்து 38 கிலோவாக தங்கம் குறைந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கம் மாயமான வழக்கில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். துவாரபாலகர் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டவை என்பதை மறைத்து, அதற்குப் பதிலாக கோயிலின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவற்றை செப்புத் தாள்களாக அவர் பதிவு செய்ததது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது நபர் சுதீஷ்குமார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
