பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து..!!

Estimated read time 0 min read

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்; ஈத் முபாரக்! மிலாது நபி நன்னாளில் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் நமது வாழ்வில் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும். இரக்கமும், சமுதாய நலனுக்கான மனப்பான்மையும் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி; இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!

மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!

இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author