டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை நிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார்.
இது உலகளவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மாணவர் சமூகத்தினரிடையே!
டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புபடி, ஹார்வர்டின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட(SEVP) சான்றிதழ் “உடனடியாக ரத்து செய்யப்பட்டது” என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார்.
“ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நான் எழுதுகிறேன்,” என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
ஒரு சமூக ஊடகப் பதிவில், “வன்முறை, யூத எதிர்ப்பு மற்றும் அதன் வளாகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்ததற்காக ஹார்வர்டைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக” ஹார்வர்டை அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்
