புதுடெல்லியில் நடைபெற்ற உளவுத்துறையின் தேசியப் பாதுகாப்பு உத்தி மாநாட்டின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே இங்கு வாழ முழு உரிமையும் உள்ளது” என மிகக் காரசாரமாக தெரிவித்தார்.
சட்டவிரோத ஊடுருவல்கள் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மக்கள் தொகை சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் எச்சரித்தார்.
இந்தியா சத்திரம் அல்ல: உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அமித் ஷாவின் 2047 திட்ட வரைபடம்
