நாடு முழுவதும் வங்கி சேவைகள் வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வாரத்தில் 5 நாள் வேலை மற்றும் புதிய ஊக்கத்தொகைத் திட்டம் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) செப்டம்பரில் 4 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
UFBU வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, செப்டம்பர் 11-ஆம் தேதி முதற்கட்டமாக ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களில் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும். அக்டோபர் 26-க்குள் தீர்வு காணப்படாவிட்டால் வரம்பற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் போராட்டம்: செப்டம்பர் மாதம் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம்
