சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் 41 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 521 பேரிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்கள் “வலிமைமிக்க தலைமை”, “உலக நிலைத்தன்மையைப் பேணிக்காப்பற்கான ஆக்கப்பூர்வமான ஆற்றல்”, ”வளரும் நாட்டு நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது” ஆகியவற்றைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தங்களின் மிக முக்கிய மூன்று கருத்துக்களாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வியை மேம்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய துறைகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சிறந்த ஆட்சிமுறை மேற்கொண்டுள்ளதாகவும் இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
