7 மாதங்களுக்கு பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்?  

Estimated read time 1 min read

ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் இடைத்தேர்தல் வரவிருப்பதாலும், போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதாலும் போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் தனக்குள்ளேயே ஆதரவு தெரிவித்து வருகிறார்.
பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கைவிடும் என்பது அவரது கணிப்பாக உள்ளது.
இதற்காக ஈரானின் எண்ணெய், கப்பல் போக்குவரத்து, விண்வெளி மற்றும் டிஜிட்டல் சொத்துகளை இலக்கு வைத்து ‘ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ என்ற பொருளாதார தடையை அமெரிக்கா அண்மையில் தொடங்கியது.

Please follow and like us:

You May Also Like

More From Author