வருமான வரித் தவறுகளை திருத்த மார்ச் 31 வரை அவகாசம்  

Estimated read time 1 min read

வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கையில்(ITR) உள்ள தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
2026-27 பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போதைய விதிகளின்படி, வரி அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால் அதைச் சரிசெய்ய அந்த நிதியாண்டின் டிசம்பர் 31 வரை மட்டுமே அவகாசம் இருந்தது.
ஆனால், இனி வரும் காலங்களில் இதை மார்ச் 31 வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31-க்கு பிறகு அறிக்கையை திருத்தினால், 5 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்கள் 1,000 ரூபாயும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 5,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

You May Also Like

More From Author