இந்தோனேசியா விமான நிலையங்கள் திறப்பு: அனக் கிரக்கடோவா எரிமலை சாம்பல் குறைந்ததால் சேவை சீரமைப்பு  

Estimated read time 1 min read

இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சாம்பல் புகை காரணமாக மூடப்பட்டிருந்த தலைநகர் ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளன.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சிக்கல்கள் குறைந்ததை தொடர்ந்து பயணிகள் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருகிறது.
அனக் கிரக்கடோவா எரிமலை கடந்த வார இறுதியில் வெடித்து, லாவா குழம்புகளையும் சாம்பல் புகையையும் வளிமண்டலத்தில் கணிசமாகப் பரப்பியது.
இதனால் வான்வெளியில் சாம்பல் படிந்ததால், பாதுகாப்பு கருதி 8 விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக சுமார் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 3,40,000-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கும் சூழல் உருவானது.

You May Also Like

More From Author