சீன-வியட்நாம் கூட்டறிக்கை வெளியீடு
பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை மேலும் வலுப்படுத்தி, சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது குறித்து, சீனாவும் வியட்நாமும் கூட்டறிக்கையை வெளியிட்டன.
இவ்வறிக்கையில், தற்போது உலகத்தில் 2 ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளான சீன மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்களின் இனிமையான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சி, மனித குலத்தின் முன்னேற்றம் ஆகிய கடமைகளுக்கு தோள் கொடுக்கின்றன. புதிய யுகத்தில் சீனா பெற்றுள்ள மாபெரும் சாதனைகளை வியட்நாம் பாராட்டியது. வியட்நாமுக்கான நட்பார்ந்த கொள்கையில் சீனா ஊன்றி நின்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் உயர்நிலை நெடுநோக்கு தொடர்பை நிலைநிறுத்தி, சீன-வியட்நாம் உறவின் வளர்ச்சிக்கு கூட்டாக வழிக்காட்ட வேண்டும் என்றும், பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்திற்கு உரிய வழிமுறையாகும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.