6-ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு..!!

Estimated read time 1 min read

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், ‘தேசிய கல்வி கொள்கை – 2020’ அடிப்படையில் பாட நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தது.

குறிப்பாக 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயம் என உத்தரவிட்டது. இந்த புதிய நடைமுறை கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.புதிய நடைமுறையின்படி, மூன்று மொழிகளை மாணவர்கள் பயில வேண்டும். அவற்றில் இரண்டு மொழிகள் கட்டாயம்.

அந்த இரு மொழிகளும் இந்திய மொழியாக இருக்க வேண்டும். ஒரு மொழி மட்டும் வெளிநாட்டு மொழியாக இருக்கலாம். இவற்றில் ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம் என்பதை எதிர்த்து மாணவர், பெற்றோர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு அல்லது சலுகை அளிப்பது குறித்து சி.பி.எஸ்.இ., பரிசீலிக்க வேண்டும்.

அடுத்த கல்வியாண்டில் இருந்து கூட 6ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தலாம்.மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் வகையில் கூடுதல் சுமை அளிக்கக் கூடாது. புதிய மொழிகளை கற்பிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இவ்வழக்கு விசாரணையின்போது, ‘6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை வரையறுக்கும் அதிகாரம் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கே இருக்கிறது. சி.பி.எஸ்.இ.,க்கு இல்லை’ என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

You May Also Like

More From Author